12 ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 | Sani Peyarchi Palangal 2020-2023

2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்றும் பார்க்கலாம்.
மேஷம்
அன்பார்ந்த மேஷ ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். கர்மகாரகன் என்று கூறப்படும் சனி பகவான் தொழிலைக் குறிக்கும் கிரகம் ஆவார். சொந்த வீடான மகர ராசிக்கு செல்லும் சனி பகவான் அதாவது உங்கள் ராசிக்கு பத்தாமிடம் செல்லும் சனி பகவான்
  • உங்களுக்கு தொழிலில் வளரச்சியை அளிப்பார்.
  • பதவி உயர்வுகளை அளிப்பார்
  • காதல் உறவைத் திருமண உறவாக மாற்றி அமைப்பார்
  • திருமண வாழ்க்கையைச் சிறக்க வைப்பார்
  • நிதிநிலை சிறக்க வைப்பார்
  • தொழிலில் வளர்ச்சி அளிப்பார்
  • ஆரோக்கியத்தில் கவனம் தேவை
  • கல்வியில் கவனம் தேவை
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்



ரிஷபம்
அன்பார்ந்த ரிஷப ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். ஆட்சி வீடான மகரத்தில் சில சாதகமான பலன்களை சனி பகவான் வழங்குவார்.
  • உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.
  • கணவன் மனைவி உறவு சிறக்கும்
  • பெண்கள், முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
  • வங்கிக் கடன் கிட்டும்
  • தொழிலில் தாமதம் நீங்கும்
  • கல்வியில் படிப்படியாக மேன்மை கிட்டும்
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மிதுனம்
அன்பார்ந்த மிதுன ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். மிதுன ராசிக்கு அஷ்டம சனியாக இருந்தாலும்  தன ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானத்தை பார்வையிடும் சனி பகவான் அருளால்
  • தனம் பெருகும்
  • கணவன் மனைவி ஒற்றுமை கூடும்
  • பதவி உயர்வு, வருமான உயர்வு ஏற்படும்
  • ஆரோக்கியத்தில் கவனம் தேவை
  • சிறு முதலீட்டில் அதிக லாபம் கிட்டும்
  • கல்வி சிறக்கும்
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கடகம்
அன்பார்ந்த கடக ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இது உங்கள் ராசிக்கு களத்திரம் மற்றும் திருமண ஸ்தானம் ஆகும். இது உங்கள் ராசிக்கு கண்டச் சனி ஆகும். கண்டசனியாக இருந்தாலும் பாக்கிய ஸ்தானம் சுகஸ்தானம் சனியால் பார்க்கப்படுவதால் சனி பகவான் அருளால்
  • நிலம், வண்டி, வாகனங்களால் ஆதாயம்
  • நல்லுறவு பராமரிப்பதன் மூலம் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளைக் களையலாம்.
  • தொழிலில் மேம்பட்ட நிலை காணலாம்
  • பொருளாதார நிலை உயரும்
  • ஊக வணிகம் தவிர்க்க வேண்டும்
  • கல்வி சிறப்பாக இருக்கும்
மேலும் விவரங்கள் அறிய  இங்கே கிளிக் செய்யவும்.

சிம்மம்
அன்பார்ந்த சிம்ம ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இந்த ஸ்தானத்தில் சனி பகவான் மிக்க நன்மைகளையே அளிப்பார்.  சனி பகவான் அருளால்
  • மே மாதத்திற்குப் பிறகு குடும்ப ஒற்றுமை கூடும்
  • போட்டிகளில் வெற்றி கிட்டும்
  • உத்தியோக உயர்வு கிட்டும்
  • பொருளாதார நிலை மேம்படும்
  • தொழிலில் புதிய தொடர்புகள் ஏற்படும்
  • ஆரோக்கியத்தில் கவனம் தேவை
  • கல்வியில் பாராட்டு கிட்டும்
  • போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.


கன்னி
அன்பார்ந்த கன்னி ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இந்த ஸ்தானத்தில் சனி பகவான் மிக்க நன்மைகளையே அளிப்பார்.  சனி பகவான் அருளால்
  • பொருளாதார நிலை உயரும்
  • திருமணம் கை கூடும். புத்திர பாக்கியம் கிட்டும்
  • உத்தியோக உயர்வு கிட்டும்
  • ஆரோக்கியத்தில் கவனம் தேவை
  • ஊக வணிகம் கை கொடுக்கும்
  • மாணவர்களின் கல்வி சிறக்கும்
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.


துலாம்
அன்பார்ந்த துலாம் ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். நீதி நேர்மை தவறாது கடமையாற்றினால் துலாம் அன்பர்களுக்கு சனி பகவான் நன்மைகளையே அளிப்பார்.  சனி பகவான் அருளால்
  • தன லாபம். சொத்து சுகம் கிட்டும்
  • உத்தியோக உயர்வு கிட்டும்
  • குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்
  • முதியோர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும்
  • ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்
  • வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிட்டும்
  • மென்பொருள் தொழில் நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள்
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.


விருச்சிகம்
அன்பார்ந்த விருச்சிக ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இந்த ஸ்தானத்தில் சனி பகவான் மிகுந்த நற்பலன்களை விருச்சிகராசி அன்பர்களுக்கு அளிக்கவிருக்கிறார். சனி பகவான் அருளால்
  • பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்
  • கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்
  • கைத் தொழில் சிறக்கும்
  • ஏற்றுமதித் தொழிலில் லாபம் கிட்டும்
  • உத்தியோகத்தில் உயர்வு கிட்டும்
  • இயற்பியல் துறை மாணவர்கள் பிரகாசிப்பார்கள்
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.


தனுசு
அன்பார்ந்த தனுசு ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். தனுர் ராசி அன்பர்களுக்கு ஏழரை சனி காலகட்டத்தில் பாத சனி எனும் நிலையில் சனியின் சஞ்சாரம் அமையப் போகிறது.  சனி பகவான் அருளால்
  • திருமணத் தடைகள் நீங்கும்
  • குழந்தை பாக்கியம் கிட்டும்
  • உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிட்டும்
  • திரைத் துறையினருக்கு அங்கீகாரம் கிட்டும்
  • வேதியியல் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவார்கள்
மேலும் விவரங்கள் அறிய  இங்கே கிளிக் செய்யவும்.


மகரம்
அன்பார்ந்த மகர ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்யவிருக்கிறார். உங்கள் ராசிக்கு ஜென்ம சனி எனும் சிறப்பு அந்தஸ்துடன் சனியின் சஞ்சாரம் நிகழப்போகிறது. சனி பகவான் அருளால்
  • திருமண முயற்சி கைகூடும்
  • கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும்
  • குழந்தைகளின் மந்த நிலை நீங்கும்
  • கடன் பிரச்சினைகள் தீரும்
  • தொழிலில் முன்னேற்றம் கிட்டும்
  • சில துறையைச் சார்ந்த மாணவர்கள் சாதனைகளைப் புரிவார்கள்
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்..


கும்பம்
அன்பார்ந்த கும்ப ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இது அயன சயன போக ஸ்தானம் ஆகும். சனி பகவான் அருளால்
  • கணவன் மனைவி ஒற்றுமை கூடும்
  • புத்திர பாக்கியம் கிட்டும்
  • உத்தியோக ரீதியாகவோ உல்லாசமாகவோ வெளிநாட்டு பயணம் அமையும்
  • கருமமே கண்ணாக உழைத்தால் வெற்றி நிச்சயம்
  • முதலீட்டின் மூலம் லாபம் கிடைப்பது அரிது
  • மாணவர்களுக்கு படிப்படியாக கல்வியில் முன்னேற்றம் கிட்டும்
மேலும் விவரங்கள் அறிய   இங்கே கிளிக் செய்யவும்.


மீனம்
அன்பார்ந்த மீன ராசி நேயர்களே! 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார்.  லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் அருளால்
  • கணவன் மனைவி அன்னியோன்யம் கூடும்
  • புத்திர பாக்கியம் கிட்டும்
  • பூர்வீக சொத்து சேரும்
  • உத்தியோகத்தில் வேலை சுமை குறையும்
  • வருமானம் உயரும்
  • மாணவர்களுக்கு விரும்பிய துறையில் சேர்க்கை கிடைக்கும்.
மேலும் விவரங்கள் அறிய   இங்கே கிளிக் செய்யவும்.


இவ்வாறு, சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி, அனைத்து ராசிகளுக்கும் அவற்றுக்குரிய மாறுபட்ட பலன்கள் அளிப்பதைக் கண்டோம். மகரத்தில் இந்த சனியின் போக்குவரத்து வாழ்க்கை, அன்பு, உறவுகள், சுகாதாரம், வணிகம் மற்றும் நிதி தொடர்பான உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? வரவிருக்கும் சவால்களுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும், போக்குவரத்துக் காலத்தின் நேர்மறைகளை அனுபவிக்கவும் எங்கள் நிபுணர் வேத ஜோதிடர்களிடமிருந்து உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட  சனி பெயர்ச்சி 2020 அறிக்கையைப் பெறுங்கள்..

Comments

  1. Great Post, Thanks for this blog. An Astrologer Named Dr. Sundeep Kochar is the Famous Astrologer in Mumbai you can consult him for vedic Astrology, Vastu Consultation, Horoscope Reading, Matchmaking, Palmistry and Face Reading for your life today. He is most trusted astrologer also.

    ReplyDelete
  2. Such a great and useful blog, you can visit Upasak Puja Samagri store Here you can buy Puja samagri. Here you can also buy Laddu Gopal dresses online

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சனி பெயர்ச்சி பலன்கள் 2020-2023